தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 3077 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்து, 7 லட்சத்து 193 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கோவிட் தொற்று பாதித்து 45 பேர் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 4314 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,55,170 ஆக அதிஅக்ரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 34,198 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை நகரை பொருத்தவரை, தொடர்ந்து 4ம் நாளாக ஆயிரத்திற்கு கீழ் தொற்று பாதிப்பு உள்ளது. இன்று 833 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னை நகரில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 93 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளாக கோவையில் 285, செங்கல்பட்டு 193, திருவள்ளூர் 170, திருப்பூரில் 155 பேர், சேலத்தில் 140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.