உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.23 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.18 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42.89 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1.61 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 95ஆயிரம் பேரின் நிலை கவலை அளிக்கிறது.