ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 மற்றும் ஒருநாள் போட்டி முடிந்து இறுதியாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் விராட்கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், முதல் டெஸ்ட் போட்டி முடிந்து (டிசம்பர் 17-21) கேப்டன் விராட்கோலி நாடு திரும்புகிறார். இது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பு என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விராட்கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் கூறுகையில்,வீராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டோடு நாடு திரும்புகிறார். முன்பெல்லாம் எங்களால் இப்படி போய்விட்டு வர முடியாது. கவாஸ்கர் தன்னுடைய மகனை பல மாதங்களாக பார்க்கவில்லை.
அது வேறு சூழல். இப்போது நிலைமை மாறிவிட்டது. கோலி தன்னுடைய அப்பா இறந்தபோது மறுநாளே ஆட வந்து விட்டார். தற்போது அவர் தன்னுடைய குழந்தை பிறப்புக்காக லீவு எடுக்கிறார். நல்லதுதான். அவருக்கு கிரிக்கெட்டில் உள்ள ஆர்வத்தை விட, குழந்தையை ஏந்தும் ஆர்வம்தான் அதிகம் இருக்கிறது என்பதை உணர்கிறேன். மதிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.