என்ன இவங்க போலிங் போடா போறாங்களா..! இந்திய அணிக்கு உள்ளேயே எதிர்ப்பு

அகமதாபாத்,

 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் பவுலிங் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

நாளை இந்தியா இங்கிலாந்து இடையிலான பிங்க் பால் டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. பகலிரவு ஆட்டமாக இந்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் பவுலிங் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணியில் ஒரு காலத்தில் விராட் கோலி பவுலிங் மற்றும் பேட்டிங் செய்து வந்தார். கேப்டன் ஆன பின் கோலி மொத்தமாக பவுலிங் செய்வதை நிறுத்திவிட்டார்.

அதோடு இவர் ஐபிஎல் போட்டிகளில் பவுலிங் போட்டு அவமானப்பட்ட காரணத்தால் பவுலிங் போடுவதை நிறுத்திவிட்டார். வலைப்பயிற்சியில் மட்டும் அவ்வப்போது இவர் பவுலிங் வீசி வந்தார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவர் பவுலிங் செய்ய அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இது பிங்க் பால் போட்டி என்பதால் இதில் பவுலிங் செய்ய கோலி விரும்புகிறார். நீண்ட நேரம் பவுலிங் செய்வதால் பாஸ்ட் பவுலர்கள் சோர்வடைய வாய்ப்புள்ளது. இதனால் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலா 5 ஓவர்கள் வீச வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்காக இவர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

கோலி கொடுத்த ஐடியா இது என்று கூறப்படுகிறது. ஆனால் பயிற்சியாளர் குழு இதை பெரிய அளவில் விரும்பவில்லை. கோலி பவுலிங் செய்வது சரியான முடிவாக இருக்காது. இதனால் அவருக்கு தேவையில்லாத காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கோலியின் இந்த முடிவை பயிற்சியாளர் குழு விரும்பவில்லை என்கிறார்கள்.

 

 

Translate »
error: Content is protected !!