ஏழாம் கட்ட தொல்லியல் துறை பணிகளை காணொலிக் காட்சி மூலமாக எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி ழனிசாமி 13 ந்தேதி அன்று தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் ஏழாம் கட்டமாக தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள தொல்லியல் அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

பழந்தமிழரின் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம்,

கீழடி கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லி யல் மேட்டில் இந்திய தொல்லியல் துறை 2014 2015, 2015 2016, 2016 2017 ஆகிய மூன்று ஆண்டுகளில் அகழாய்வுகள் மேற்கொண்டு, 7,818 தொல்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு கீழடியில் சங்க கால (வரலாற்றுத் தொடக்க காலம்) மக்கள் வாழ்ந்ததற்கானச் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன.

இச்சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வினை மேற்கொள்ள மத்தியத் தொல்லியல் ஆலோசனைக் குழுவின் அனுமதியினைப் பெற்றது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2017 2018ம் ஆண்டு நான்காம் கட்ட அகழாய்வினை மேற்கொண்டது.

இந்த அகழாய்வில் 5,820 தொல்பொருட்களும், பழந்தமிழரின் கட்டுமானப் பகுதிகளும் வெளிப்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 2018 2019ம் ஆண்டு ஐந்தாம் கட்ட அகழாய்வில் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள், செங்கல்லிலான திறந்த நிலையிலான வாய்க்கால், மூடிய நிலையிலுள்ள வடிகால், சுருள் வடிவிலான சுடுமண் குழாய் போன்ற வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டன.

ஏறத்தாழ 900 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 2019 2020ம் ஆண்டு ஆறாம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகளில் சுமார் 2,672 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் ஏழாம் கட்டமாக தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்

 

Translate »
error: Content is protected !!