தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது பிரச்சாரத்தில் பல்வேறு தகவல்களை தினம்தோறும் கூறிவருகிறார். அந்த வகையில் தனக்கு சுகர் இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறிய அமைச்சர், நேற்று (30.03.2021) ‘எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் நான் இருந்து என்ன பயன்’ என்று கண்ணீர் சிந்தினார். இந்நிலையில், ‘தொற்று காலத்தில் கரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளுடன் உரையாடியஇந்தியாவின் ஒரே அமைச்சர் நான்தான்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.