கொடைக்கானலில் நோயாளிகளுக்கு போர்வைகள் மற்றும் மெத்தை விரிப்புகள் பழனி தொகுதி எம்எல்ஏ உத்தரவின் பேரில் திமுகவினரால் வழங்கபட்டது

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு போர்வைகள் மற்றும் மெத்தை விரிப்புகள் பழனி தொகுதி  எம்எல்ஏ .பி.செந்தில்குமார் உத்தரவின் பேரில் திமுவினரால் வழங்கபட்டது.

இந்தியா முழுவதும் கொரானா நோய்தொற்று இரண்டாவது அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கும்,தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கும் குளிரின் காரணமாக போர்வைகள் மற்றும் மெத்தை விரிப்புகள் தேவைப்பட்டது.

இதுபற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பொன்ரதி பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம்  கோரிக்கை வைத்தார். இதையடுத்து நேற்று அரசு மருத்துவமனைக்கு 100 போர்வைகள் மற்றும் மெத்தை விரிப்புகளை எம்எல்ஏ பி செந்தில்குமார் வழங்க உத்திரவிட்டுள்ளார்.

இந்த உபகரணங்களை கொடைக்கானல் நகர திமுக செயலாளர் முகமது இப்ராஹிம் ,தலைமையில் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் செல்லத்துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், நகர துணைச் செயலாளர் சக்தி, மோகன் நகர பொருளாளர் நைனார் ஆகியோர் கொடைக்கானல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பொன்ரதியிடம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஸ்ரீதர் ,டாக்டர் சந்தோஷ், டாக்டர் மதன் ஆகியோர் உடன் இருந்தனர்வருங்காலத்தில் நோய் தொற்றின் காரணமாக நோயாளிகள் அதிகமாகும் பட்சத்தில் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக படுக்கை வசதிகள் தேவைப்படும் நிலையில் நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதியை நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என அரசு மருத்துவமனை டாக்டர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!