கொரோனா பாதிப்பு இன்று எவ்வளவு? சுகாதாரத்துறை அறிக்கை!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2,481 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இன்று 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 690. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,810 பேருக்குத் தொற்று உள்ளது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,29,507. இதில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 2,01,195 ஆகும். தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 19,504. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,00,99,
519.
மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,40,252 பேர். பெண்கள் 2,89,223 பேர். மூன்றாம் பாலினத்தவர் 32 பேர். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,453 பேர். பெண்கள் 1,028 பேர் ஆவார்கள்.

தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 3,940 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 6,98,820 ஆகும். தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கோவிட் வைரஸ் நோய்த் தொற்றினால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, உயிரிழப்பு எண்ணிக்கை 11,183 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 3,669 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!