எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன, இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் நெருக்கடியில் உள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிக்கலில் உள்ளாகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .825.50 காசிலிருந்து ரூ .850.50 காசுகளாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது, விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 850.50.காசுக்கும் இதேபோல், ஒரு வணிக எரிவாயு சிலிண்டரின் விலை லிட்டருக்கு ரூ.84.50 காசுகள் அதிகரித்து ரூ.1,687.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.