சிஸ்கே அணியின் நிலவரம் என்ன!

சென்னை,

சிஎஸ்கே அணி அதிகம் நம்பி இருக்கும் முக்கியமான வீரர்கள் பலர் பார்ம் அவுட் ஆகி உள்ளதால் அணி நிர்வாகம் கொஞ்சம் பதற்றத்தில் உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான மினி ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்யப்பட வேண்டிய வீரர்களை எல்லா அணிகளும் ரிலீஸ் செய்துவிட்டது.

இந்த தொடருக்காக சிஎஸ்கே அணி சில முக்கியமான வீரர்களை அதிகம் நம்பி இருக்கிறது. அதன்படி ராயுடு, தோனி, ரெய்னா, டு பிளசிஸ், ஜடேஜா, உத்தப்பா, பிராவோ, சாம் கரன், தாஹிர் ஆகிய வீரர்களை நம்பி உள்ளது. இதில் ஜடேஜா, சாம் கரன் மட்டுமே பார்மில் இருக்கிறார்கள்.

மற்ற வீரர்கள் யாரும் சிஎஸ்கே அணியில் பார்மில் இல்லை . பிராவோ கடந்த ஒன்றரை வருடமாக நடந்த லீக் போட்டிகள் எதிலும் ஆதிக்கம் செலுத்தவில்லை. உத்தப்பா மூன்றுக்கு வருடமாக பெரிய அளவில் அதிரடியாக ஆடவில்லை.

இன்னொரு பக்கம் தாஹிர், ரெய்னா இரண்டு பேருமே கடந்த இரண்டு வருடமாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. தோனி, டு பிளசிஸ், ராயுடு போன்ற மிக மோசமான பார்மில் உள்ளனர். இவர்கள் யாரும் முதல் தர போட்டிகளில் பெரிதாக ஆடவில்லை. பயிற்சியும் மேற்கொள்ளவில்லை.

சென்னை அணி இப்படி நம்பி இருக்கும் வீரர்கள் எல்லோரும் பார்ம் அவுட்டில் இருப்பதால் சென்னை அணி நிர்வாகம் கொஞ்சம் பதற்றத்தில் உள்ளது. வீரர்கள் எல்லோரும் நம்பிக்கை அளிக்காத காரணத்தால் இந்த வருடமும் கடந்த வருடம் போல வீரர்கள் சொதப்பி விடுவார்களே என்று அணி நிர்வாகம் கவலை அடைந்துள்ளது.

இதனால் சிஎஸ்கே அணி சில மாற்று வீரர்களை தயாராக வைத்து இருக்கும் என்று கூறுகிறார்கள். இளம் மாற்று வீரர்கள் இருப்பார்கள் . ஏதாவது ஒரு வீரர் தொடர்ந்து சொதப்பினால் அவர்களை இளம் வீரர்கள் மாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது .

Translate »
error: Content is protected !!