நிவர் புயல் கரை கடக்கும் நிலையில், சென்னையில் உள்ள மக்கள் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை நோக்கி நிவர் புயல் நெருங்கிக் கொண்டிருக்க, வட தமிழக மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. நிவர் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை, புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. புயலை கரையை கடக்கும் போது, 155 கி.மீ., வரையில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், நிவர் புயல் பாதிப்பிற்குள்ளாகியுள்ள சென்னை மக்கள் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை மக்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில், குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தமிழகம் மீது தனி மரியாதையும், பாசமும் கொண்டுள்ளனர். அதை நிரூபிக்கும் வகையில் சென்னை மக்கள் மீது டேவிட் வார்னர் அக்கறையை வெளிப்படுத்தி இருப்பது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.