செய்தி துளிகள்…

  • தமிழகத்தில் பிளஸ்-2 அட்டவணை வெளியீடு….தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
  • மீண்டும் அசோக் செல்வனுடன் இணையும் வாணி போஜன்.
  • ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகும் ஆர்யாவின்டெடி’…..ரிலீஸ் தேதி இதோ!
  •  புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்கிறார். கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பொறுப்பு ஆளுநராகிறார்.
  • தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்களாக தனசேகரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் 3 ஆண்டுகளுக்கு மாநில தகவல் ஆணையர்களாக பதவி வகிப்பார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இந்தியாவை உலகநாடுகள் தற்போது, மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தொழில்நுட்பத் துறையில் பல்வேறு கொள்கைகள் மற்றும் முடிவுகளை அரசு எடுத்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண் மற்றும் சுகாதார துறைகளுக்கு உதவ வேண்டும் எனவும் கூறினார்.
  • 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம்.
  • வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். எழுத்துப்பூர்வமாக பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
  •  ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் துவக்க விழா, விருப்பமனு விநியோகம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
  • டெல்லி செங்கோட்டை வன்முறை தொடர்பாக மனீந்தர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டையில் வாளை சுழற்றியதாக வீடியோ பதிவு வெளியான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியாவில் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை, குடும்ப அரசியலுக்கு இடமில்லை என மத்திய இணை உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். குடும்ப அரசியல் கட்சிகளை மக்கள் ஒதுக்குவார்கள் எனவும் கூறினார்.
  •  மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என புதுச்சேரியில் மீனவப்பெண்கள் உடனான கலந்துரையாடலில் ராகுல்காந்தி கூறியுள்ளார். விவசாயிகளை போல் மீனவர்களுக்கும் சலுகை கிடைக்க வேண்டும்  என ராகுல்காந்தி பேசியுள்ளார்.
  • அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் தொடந்த வழக்கு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • கொடைக்கானல் அரசுப் பள்ளியில் பயிலும் 10 ற்றும் 12-ம் குப்பு மாணவிகள் ஆதிதிராவிடர் நல விடுதியிலிருந்து வெளியேற்றம்.
  • ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஜமாலையா என்பவர் வங்கி கணக்கு இல்லாததால் தனது வீட்டிலேயே இரும்புப்பெட்டியில் பணத்தை சேமித்து வந்த நிலையில் சுமார் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளை கரையான்கள் சல்லடையாக துளைத்து விட்டன. வீடுகட்டும் கனவை கரையான்கள் கலைத்துவிட்டதாக ஜமாலையா தெரிவித்துள்ளார்.
  • வாக்காளர் பட்டியலை வழங்க கோரி திமுக முதன்மை செயலாளர் நேரு தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
  • சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் சொல்லவில்லை, ஊடகங்கள் தான் தெரிவித்தது.
  • மருத்துவர்கள் சசிகலாவை ஓய்வு எடுக்கச் சொன்னதால் அவர்கள் ஓய்வு முடிந்த பிறகு வெளியே வருவார்டிடிவி தினகரன்.
  • 105 குழந்தைகளை பெற்று வளர்க்க துடிக்கும் ரஷ்ய தம்பதி.
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்.
  • அமெரிக்க மக்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி செலுத்தப்படும்….ஜோ பைடன்.
Translate »
error: Content is protected !!