சேலம் லைஃப் டிரஸ்ட்க்கு நிதியுதவி வழங்கிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்

சேலம் லைஃப் டிரஸ்ட் ஆதரவற்றோர் முதியோர் இல்ல நிர்வாக அறங்காவலர் S.கலைவாணி அவர்கள் இன்று வரை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி,14 வருடங்களாக 2716-க்கும் மேற்பட்ட அனாதை உடல்களை அடக்கம் செய்துள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று காலத்தில் இறந்த உடல்களை அடக்கம் செய்து வருகிறார்.

S.கலைவாணி அவர்கள் கொரோனா தொற்று காலத்தில் கொரோனா நோயாளிகளின் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் பொழுது தங்களை பாதுகாத்துக்கொள்ள கொரோனா கவச உடை மற்றும் சில உபகரணங்கள் வாங்குவதற்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் SR.பார்த்திபன் MPயிடம் உதவி கேட்டிருந்தார்.

தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று நேரில் அவர்களிடம் SR.பார்த்திபன் MP தன்னுடையை சொந்த பணத்தில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!