சையத் முஷ்டாக் அலி டி20 கிரிகெட் : நாளை இறுதி போட்டி….தமிழகம் – பரோடா அணிகள் மோதல்

ஆமதாபாத்,

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்காக டி20 கிரிகெட் போட்டியின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் தமிழகம்பரோடா அணிகள் மோதுகின்றன.

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று பகலில் நடந்த முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, அசோக் மெனரியா தலைமையிலான ராஜஸ்தானை எதிர்கொண்டது.

டாஸ்ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்த அந்த அணியின் கேப்டன் அசோக் மெனரியா (51 ரன், 32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டனார்.

அதைத் தொடர்ந்து தமிழக அணியின் சிறப்பான பந்து வீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத ராஜஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள். வேகப்பந்து வீச்சாளர் எம்.முகமது 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 2 விக்கெட்டும், சோனு யாதவ், பாபா அபராஜித், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தொடர்ந்து 155 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 4 ரன்னிலும், அவரரை தொடர்ந்து களம் இறங்கிய அபராஜித் 2 ரன்னிலும் வெளியேற 3.2 ஓவரில் 17 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தமிழ்நாடு அணி தடுமாறியது. 9.4வது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நாரயணன் ஜெகதீசன் 28 ரன் (28 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார்.

நெருக்கடியான நிலையில், அருண் கார்த்திக்கேப்டன் தினேஷ் கார்த்திக் இணைந்து பொறுப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அருண் 33 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். 18.4 ஓவர்களில் தமிழக அணி 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அருண் கார்த்திக் 54 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ரன்னும், தினேஷ் கார்த்திக் 17 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 26 ரன்னும் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பஞ்சாப்பரோடா அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதி போட்டியில் முதலில் பேட் செய்த பரோடா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதைத் தொடர்ந்து பரோடா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. பரோடா அணி ஏற்கனவே 3 முறை இறுதிபோட்டியில் விளையாடி 2 முறை (2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில்) கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதைத் தொடர்ந்து நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் தமிழக அணியும், பரோடா அணியும் மோதுகின்றன. தமிழக அணி கடந்த முறை (2019) இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோல்வி அடைந்தது. தினேஷ் கார்த்தி தலைமையிலான தமிழக அணி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் என்று தமிழக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!