தனுஷ் நடிக்கும் ‘டி44’ படத்தின் தலைப்பு அறிவிப்பு

தனுஷ் நடிக்கும் ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளிட்டு வருகிறார்கள். அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் “டி 44” படத்தில் நடிக்கிறார்கள் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளிட்டுள்ளது.

அதன்படி, படத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் அதிக அளவில் ஷேர் செய்ய பட்டுவருகிறது.

 

 

Translate »
error: Content is protected !!