தமிழகத்தில் இன்று 2184 பேருக்கு கொரோனா… மருத்துவமனையில் இருந்து 2210 பேர் டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இன்று மட்டும் 28 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் படிப்படியாகவே குறைந்து வருகிறது. இன்றைய நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று ஒரே நாளில் 2184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7.5 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் மட்டும் 28 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2210 பேர் ஆகும். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7, 20, 339 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் சராசரி 92% மேல் உள்ளது. தமிழகத்தில் தற்போது 18, 655 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, இன்றும் 600-க்கு கீழாக 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!