தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று துவங்கியது.
வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.