தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகம்!

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக,  கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது. இன்று ஒரேநாளில் 3536 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 5000-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக,  கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது. 

இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை இன்று மாலையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் இன்று புதிதாக 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,90,936 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 49 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,691 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று 4,515 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். எனவே, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, தமிழகத்தில் 6.42 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 38,093 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றன்ர். 

சென்னையில் இன்று ஒருநாளில் 885 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் 2,651 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!