தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

சென்னை,

தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:–

  • பொருளாதாரக்குற்றப்பிரிவு ஐஜி கணேசமூர்த்தி சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்,
  • சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி அன்பு நெல்லை போலீஸ் கமிஷனராகவும்,
  • நெல்லை போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜியாகவும், அங்கு ஐஜியாக இருந்த வித்யா குல்கர்னி சென்னை மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி சிபிசிஐடி ஐஜியாகவும், அங்கிருந்த சங்கர், வடக்கு மண்டல ஐஜியாகவும்,
  • பொதுப்பிரிவு காவல்துறை ஐஜி பவானீஸ்வரி சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
  • போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கண்ணன், சென்னை நகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் கமிஷனராகவும்,
  • கோவை ஐஜி பெரியய்யா சென்னைநகர பொதுப்பிரிவு ஐஜியாகவும்,
  • சென்னை நகர தெற்கு கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்கு மண்டல ஐஜியாகவும்,
  • நிர்வாகப்பிரிவு ஐஜி சந்தோஷ்குமார் சேலம் போலீஸ் கமிஷனராகவும், அங்கு பதவியில் இருந்த செந்தில்குமார் சென்னை நகர வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராகவும்,
  • சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர் அருண் நிர்வாகப்பிரிவு ஐஜியாகவும் அமர்த்தப்பட்டுள்ளனர்.
  • ஆயுதப்படை டிஐஜி ராஜேஷ்வரி சென்னை மேற்கு மண்டல இணைக்கமிஷனராகவும், அங்கிருந்நத மகேஷ்வரி தலைமையிட டிஐஜியாகவும்,
  • தலைமையிட டிஐஜி செந்தில்குமாரி தென்சென்னை போக்குவரத்துப்பிரிவு இணைக்கமிஷனராகவும், அங்கிருந்த லட்சுமி தென் சென்னை சட்டம், ஒழுங்கு இணைக்கமிஷனராகவும்,
  • தென்சென்னை போக்குவரத்துப் போலீஸ் இணைக்கமிஷனர் பாபு நிர்வாகப்பிரிவு டிஐஜியாகவும், அங்கிருந்து துரைக்குமார் சென்னை வடக்கு மண்டல இணைக்கமிஷனராகவும்,
  • வடக்கு மண்டல இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் சென்னை நகர கிழக்கு மண்டல இணைக்கமிஷனராகவும், அங்கிருந்த சுதாகர் மதுரை டிஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
  • மதுரை டிஐஜி ராஜேந்திரன் உள்நாட்டுப்பாதுகாப்புப்பிரிவு டிஐஜியாகவும்,
  • சென்னை நகர போக்குவரத்துப் போலீஸ் (வடக்கு) இணைக்கமிஷனர் பாண்டியன் விழுப்புரம் டிஐஜியாகவும், அங்கிருந்த எஜிலியரசன் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணைக்கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • சென்னை வடக்கு போக்குவரத்து துணைக்கமிஷனர் கிருஷ்ணராஜ் நெல்லை எஸ்பியாகவும், நெல்லை எஸ்பி மணிவண்ணன், துாத்துக்குடி எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
  • துாத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் பூந்தமல்லி 13வது பட்டாலியன் எஸ்பியாகவும், அங்கிருந்த பாஸ்கரன் அரியலுார் எஸ்பியாகவும்,
  • அரியலுார் எஸ்பி சீனிவாசன் நெல்லை சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராகவும், அங்கிருந்த சரவணன் துாத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சிப் பள்ளி எஸ்பியாகவும், அங்கிருந்த ராமகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட் மானிடரிங் வழக்குகள் பிரிவு எஸ்பியாகவும்,
  • ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனன் கோவை தலைமையிட துணைக்கமிஷனராகவும், அந்த பதவியில் இருந்த குணசேகரன் சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும்,
  • சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்பி சிவக்குமார் ராணிப்பேட்டை எஸ்பியாகவும்,
  • வணிக குற்றப்புலனாய்வுப்பிரிவு எஸ்பி பாண்டியராஜன் நீலகிரி எஸ்பியாகவும், நீலகிரி எஸ்பி சசிமோகன் கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனராகவும், கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனர் அதிவீரபாண்டியன் சென்னை கமிஷனர் அலுவலக தலைமையிட துணைக்கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!