தமிழகம் நோக்கி வரும் புரெவி புயல்… எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

தமிழகம் நோக்கு வரும் புரெவி புயல், கன்னியாகுமரி – பாம்பன் இடையே டிச.4ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக, என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து உருவாகி இருக்கும் புயலுக்கு ‘புரெவி’ புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, இலங்கை அருகே திரிகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இதையடுத்து புயலாக மேலும் வலுவடைந்து புயல், கன்னியாகுமரி – பாம்பன் இடையே டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவில் அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதி கனமழைக்கும்; புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 3ம் தேதி இரவு அல்லது 4ம் தேதி அதிகாலை தென்தமிழக கடல் பகுதியை புயல் நெருங்கும்போது, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!