தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக ராஜேஷ்தாஸ் நியமனம்: லஞ்ச ஒழிப்புப்பிரிவு இயக்குநர் ஜெயந்த் முரளி

தமிழ்நாடு சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ராஜேஷ்தாசும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநராக கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயந்த் முரளி

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் நேற்று பிறப்பித்தார்.

விஜயகுமார்

தமிழக காவல்துறை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஜிபியாக இருந்த விஜயகுமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார். அதனையடுத்து தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜெயந்த் முரளி அதில் இருந்து மாற்றப்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜேஸ்தாஸ்

இதுவரை டிஜிபி அந்தஸ்தில் இருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை இயக்குநர் தற்போது ஏடிஜிபி அந்தஸ்துக்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஸ்தாஸ் ஜெயந்த் முரளி வகித்து வந்த தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அது தொடர்பாக நேற்று தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!