வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் கொண்ட இரண்டு நீண்ட மாலை அணிவிக்கப்பட்டது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதெசி விழா நடைபெற்று வருகிறது. முக்கிய திருநாளான நாளை சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் ராஜ கோபுரத்திற்கு நீண்ட மாலை அணிவிக்கப்பட்டு உள்ளது. ஆசியாவிலேயே உயரமான 236 அடி உயரம் கொண்ட இந்த ராஜகோபுரத்தின் கடைசி அடுக்கில் இருந்து ஒரு மாலை 200 அடி உயரம் என இரண்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த மாலையானது 1000 கிலோ பூக்களை கொண்டு 30 பணியாட்கள், 2 நாட்கள் கோர்த்து உள்ளனர். கோபுரத்தின் உட்புறம் நீண்ட கயிற்றின் உதவியுடன் மாலையானது கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு அதன் பின்னர் கோபுரத்தின் மீது அணிவிக்கப்பட்டது.
இப்பணியில் 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். இதே போல தயார் சன்னதிக்கு அருகில் இருக்கும் வடக்கு கோபுரத்திலும் நீண்ட மாலை அணிவிக்கப்பட்டு உள்ளது. நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் கொண்ட இரண்டு நீண்ட மாலை அணிவிக்கப்பட்டது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதெசி விழா நடைபெற்று வருகிறது. முக்கிய திருநாளான நாளை சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் ராஜ கோபுரத்திற்கு நீண்ட மாலை அணிவிக்கப்பட்டு உள்ளது. ஆசியாவிலேயே உயரமான 236 அடி உயரம் கொண்ட இந்த ராஜகோபுரத்தின் கடைசி அடுக்கில் இருந்து ஒரு மாலை 200 அடி உயரம் என இரண்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு உள்ளன. இந்த மாலையானது 1000 கிலோ பூக்களை கொண்டு 30 பணியாட்கள், 2 நாட்கள் கோர்த்து உள்ளனர். கோபுரத்தின் உட்புறம் நீண்ட கயிற்றின் உதவியுடன் மாலையானது கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு அதன் பின்னர் கோபுரத்தின் மீது அணிவிக்கப்பட்டது. இப்பணியில் 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதே போல தயார் சன்னதிக்கு அருகில் இருக்கும் வடக்கு கோபுரத்திலும் நீண்ட மாலை அணிவிக்கப்பட்டு உள்ளது. நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.