திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தை பார்வையிட்டு ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆய்வு

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள  மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி இன்று பார்வையிட்டார்; விரைவில் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்று அவர் உத்தரவிட்டார்.

திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, ஆறாண்டுக்கு  பிறகே, நீதித்துறையில் மாவட்ட செசன்ஸ் கோர்ட் உள்ளிட்டவை துவங்கப்பட்டன. எனினும், அவற்றுக்கான  உரிய கட்டடங்கள், உட்கட்டமைப்பு வசதி எதுவுமில்லை.  ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை அடுத்து கடந்தாண்டு 2018 ஜூலை மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 

அதன்படி, திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் பின்புறம், 10 ஏக்கர் நிலம், மாவட்ட நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 37 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், கோர்ட் கட்டடம் ரூபாய் 37 கோடி மதிப்பில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், 1 லட்சத்து, 66 ஆயிரத்து, 441 சதுரடி பரப்பில் அமைகிறது. 

இந்த வளாகத்தில் செசன்ஸ் கோர்ட், இரு கூடுதல் மாவட்ட கோர்ட் ஆகிய மூன்று மாவட்ட கோர்ட்டுகள், முதன்மை குற்றவியல் கோர்ட், நான்கு ஜே.எம்., கோர்ட் என எட்டு கோர்ட்டுகள் அமைகிறது. அத்துடன் நீதிபதிகள் அறை, ஊழியர் அறை, போஸ்ட் ஆபீஸ், பதிவு அறை, தலைமை எழுத்தர் அறை, இருப்பு அறை, கோர்ட் அலுவலகம், அரசு வக்கீல்கள் அறை, லாக்-அப் மற்றும் கழிப்பிட வசதி, கண்காணிப்பு கேமராக்கள், மைக் சிஸ்டம், தீத்தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற  வளாகத்தை கட்டுமானப்பணிகளை சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டுமானப் பணி விரைந்து முடித்து, கோர்ட் வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட நீதிபதிக்கு, தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Translate »
error: Content is protected !!