திருவான்மியூரில் வயதான மூதாட்டியிடம் நகை பறித்த 3 பேர் கைது

சென்னை, திருவான்மியூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் வசித்து வருபவர் தமிழரசி (வயது 70). திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அமர்ந்தி ருந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த சிலர் இலவசமாக போர்வை தருவதாக கூறி தமிழரசியை ஆட்டோவில் அழைத்து சென்று அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி மற்றும் தாலி உட்பட சுமார் 1 1/2 சவரனை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் தமிழரசி புகார் அளித்தார். அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திலகவதி, எஸ்ஐ வெங்கடேசன் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அதனையடுத்து கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த தீனா (எ) குதிரை தீனா (வயது 22), மைலாப்பூர் பகுதியை சேர்ந்த சத்தியா (எ) பால முருகன் (வயது 28), பெசன்ட் நகர் அன்வர் (வயது 36) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் கைப்பற்றினர். 70 வயது மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற நபர்களை கைது செய்து நகைகளை மீட்டு கொடுத்த ஆய்வாளர் திலகவதி மற்றும் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் தனிப்படை காவலர்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் காவல் துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!