3வது வழக்கில் கைதாகிறார் சிவசங்கர் பாபா: சிபிசிஐடி தீவிரம்

பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை மூன்றாவது வழக்கில் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னை கேளம்பாக்கத்தில் பள்ளி நடத்தி வந்த சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் மீது 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டன. இதில் இரண்டு போக்சோ வழக்குகளில் ஏற்கனவே கைதாகி தற்போது புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாக அப்பள்ளி ஆசிரியர்கள் 5 பேரை நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி சம்மன் அளித்தனர். யாரும் ஆஜராகாமல் தலைமறைவு ஆகி விட்டனர். எனவே மீண்டும் சம்மன் அளித்து அவர்கள் ஆஜர் ஆகாத பட்சத்தில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் பாபாவை மூன்றாவது வழக்கில் மீண்டும் கைது செய்வதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் இன்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் நாளை சிவசங்கர் பாபா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் ஏற்கனவே போக்சோ வழக்கில் கைதான தனியார் பள்ளி ஆசிரியரான ராஜ கோபாலன் பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!