தேனி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவதியில் நோயாளிகள்
தேனி மாவட்டம் தேனி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி,மருத்துவமனை அமைந்துள்ளது.இந்த மருத்துவமனையில் தேனி போடி ஆண்டிபட்டி பெரியகுளம் கம்பம் சின்னமனூர் உள்ளிட்ட இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர.
இந்நிலையில் உள்நோயாளிகள் வார்டுகள் அதிக அளவில் நோயாளிகள் வந்துள்ளதால் ,போதுமான படுக்கைகள் இல்லாத காரணத்தால் தரையில் படுக்கை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.தரையில் படுத்திருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவல நிலையில் உள்ளனர் நோயாளிகள் வேதனை .
மேலும் அடுத்தடுத்து நோயாளிகள் படுக்கை வசதிக்காக காத்திருக்கின்றனர். இதை தவிர்த்து ஒரே படுக்கைகளில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர் மேலும் இது தொடர்பாக மருத்துவ நிர்வாகம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என நோயாளிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் மேலும் இது போன்ற அரசு மருத்துவமனையில் தரமற்ற சிகிச்சை வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்