தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் உள்ளது. இன்று ஒரே நாளில் 2435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று போலவே 31 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதன் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நேற்று 2481 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 2435 ஆக பதிவாகி உள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 31 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று போலவே இன்றும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 2707 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 201 ஆக குறைந்துள்ளது.
தலைநகர் சென்னையிலும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று 669 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்து 848 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்ததன் மூலம் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 3677 ஆக உயர்ந்துள்ளது.
பிற மாவட்டங்களை பொறுத்தவரை கோவையில் 238 , செங்கல்பட்டு 136, திருவள்ளுர் 113 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.