நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக்: டிஜிபியிடம் புகார்

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப் பட்டுள்ளது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து நடிகை குஷ்பு புகார்  அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, நடிகை குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 4 நாட்களாக எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டுள்ளது. டில்லியில்  இருந்து வந்த பிறகு எனது டுவிட்டரில் நான் எழுத முடியவில்லை. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்தில் புகார் தெரிவித்தேன். எனது பாஸ்வேர்டை மாற்றி விட்டதாக தகவல் அனுப்பினார்கள். ஆனால் எனது ஈமெயில் ஐடியில் அது காட்டவில்லை.  இதனால் எனக்கு சந்தேகம் வந்தது. எனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது அறிந்தேன். எனது ட்விட்டர் கணக்கில் நான் பதிவு செய்த அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தது.  எனது புகைப்படம் கூட அதில் இல்லை. நான் ஒரு அரசியல் கட்சியில் பதவியில் இருக்கும்போது எனது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப் பட்டுள்ளது. எனது கணக்கை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று புகார் அளிக்க முடிவு செய்தேன். ஆனால், அதன்பின்பு எனது பெயரும் புகைப்படமும் மீண்டும் ட்விட்டர் கணக்கில்  வந்துள்ளது.

எனவே இப்போதுதான் எனக்கு பயம் அதிகமாக உள்ளது. எனவே இதுகுறித்து டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு எனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. ஆனால், தற்போது எனது அக்கவுண்ட் ஹேக் செய்துள்ளார்கள் எனவே தவறாக பயன்படுத்துவார்கள்  என்ற   பயம் எனக்கு அதிகமாக  உள்ளது. இந்தியாவிலுள்ள பல தலைவர்கள் மற்றும்  பத்திரிகையாளர்கள் செல்போன் உளவு  பார்க்கப்பட்டதாக செய்தி  வெளியாகிறது . குறிப்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கணக்கு ஹேக் செய்யப்படுவதாக தகவல் வருகிறது. அதனால்,  பாஜகவிற்கு  எந்த பயனும் இல்லை. இந்தியாவில் புதிதாக எட்டு ஆளுநர்கள்  நியமிக்கப் பட்டார்கள். அதில் ஒரு பெண் ஆளுநர் இல்லை என்பது குறித்து நான் வருத்தப்பட்டேன். ஆனால்,  ஆளுநர் பதவியை  நான் எதிர்பார்க்கவில்லை,  ஏனென்றால், அந்தளவிற்கு  எனக்கு வயதாகவில்லை. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றிருப்பது  சந்தோசமாக உள்ளது. சட்டம் தெரிந்தவர். அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். நேர்மையான ஒரு தலைவராக வந்திருப்பது, மிகவும்  சந்தோஷம்.

இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.
Translate »
error: Content is protected !!