ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்து கொண்டதற்காக, இந்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அபராதம் விதித்துள்ளது.
இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே சிட்னியில் நேற்று முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திேரலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் சேர்த்தது. கடின இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே சேர்த்து, 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் 50 ஓவர்களை வீசுவதற்கு இந்திய அணி 4 மணிநேரம் 6 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. இதையடுத்து ஐசிசி போட்டி நடுவர் டேவிட் பூன், இந்திய அணி பேட்டிங் செய்தபோது ஒரு ஓவரைக் குறைத்தும், அபராதம் விதித்தும் பரிந்துரைத்தார்.
மேலும், இந்திய அணியினர் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால், அவர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.