பாகிஸ்தான் வீரர்கள் மீது சோயிப் அக்தர் கடுமையாக சாடினார்

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மிகவும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இரண்டு டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மிகவும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த மாதிரியான கொள்கையை வெளிப்படுத்துகிறதோ அதுபோன்ற கிரிக்கெட்டை தான் பார்க்க முடியும். பாகிஸ்தான் அணியில் சராசரியான வீரர்கள் தான் இருக்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்கள் பள்ளி மாணவர்கள் மாதிரி தான் விளையாடுகிறார்கள்.

பாகிஸ்தான் அணி எப்போது டெஸ்டில் விளையாடுகிறதோ அப்போது எல்லாம் அவர்களது சாயம் வெளுத்துவிடுகிறது. கிரிக்கெட் வாரியமும் பள்ளியில் விளையாடும் வீரர்களை போன்றவர்களை தான் அணியில் வைத்துள்ளது. இனியாவது கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும். ஆனால் எப்போது மாறப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

Translate »
error: Content is protected !!