திருச்சி திருவானைக்காவல் கீழரத வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு. சந்திரசேக ரேஸ்வர சுவாமி ஆலயம், அருள்மிகு ஏகவீராம்பாள் ஆலயம், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.
காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்… இன்றையதினம் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது.
கடந்த 1-ம்தேதி விக்னேஷ்வர பூஜை மற்றும் பூர்வாங்க பூஜையுடன் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து திருக்காவிரியிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்றையதினம் காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் மகாபூர்ணாஹுதியுடன் நிறைவுபெற்று மேளதாளங்கள் முழங்கிட யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் யாவும், சிவாச்சார்யார்களின் வேதமந்திரங்கள் முழங்கிட யாகசாலையிலிருந்து புறப்பட்டு, அருள்மிகு.
சந்திரசேக ரேஸ்வர சுவாமி, ஏகவீராம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹாகும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது. தொடர்ந்து அருள்மிகு. சந்திரசேக ரேஸ்வர சுவாமி, ஏகவீராம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரா தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.