பெரியகுளம் பகவதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு பக்கதர்கள் விளையாட்டு தீ சட்டி எடுத்து நேர்தி கடன் செலுத்தி வழிபாடு. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் மிகவும் பலமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மாசித் திருவிழா நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகின்றது.
மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் இரண்டாவது நாலான இதில் இளைஞர்கள் 15 நாள் விரதமிருந்து பகவதி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக விளையாட்டு தீச்சட்டி எடுத்து ஊரில் முக்கிய வீதிகள் ஆன வைத்தியநாதபுரம் அரண்மனைதெரு ஜமீன்தார் பாடசாலை நாயுடு ஸ்ட்ரீட் ஆகிய வீதிகளில் ஆடியவாரு 3 முதல் 4 கிலோ மீட்ட தூரம் கையில் விளையாட்டு தீச்சட்டி எடுத்து ஆடிய வண்ணம் கோவிலுக்கு வந்தனர் தமிழர்களின் வேர விளையாட்டான சிலம்பம் சுத்தியவாருகோவில் வரும் நிகழ்வு நடைபொற்றது.
மேலும் பகவதி அம்மனுக்கு தேங்காய் பலம் அவசியம் செய்து சாமி தரிசனம் செய்தனர் இந்த விளையாட்டு தீச்சட்டி ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்..