அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்குள்ள மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு அறையில் ஒரு மாணவர் என்ற வீதத்திலும், சமூக இடைவெளி, மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கல்லூரிகள் மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவுவது கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த மாணவருக்கு கொரோனோ உறுதியானதால் மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாணவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கல்லூரியில் உள்ள மாணவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!