மருந்து கடையை உடைத்து 2 லட்ச ரூபாய் பணம் கொள்ளை.. காவல்துறையினர் வழக்குப்பதிவு..!

மருந்துக் கடையை உடைத்து இரண்டு லட்ச ரூபாய் பணம் கொள்ளை பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காந்தி சிலை அருகே உள்ள பிரபல மருந்து  கடையான  சிவஸ்ரீ மெடிக்கல் என்ற மருந்து கடையில் நேற்று இரவு கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மூன்று நாட்கள் மருந்துகள் விற்ற 2 லட்சம் ரூபாய்க்கு மேலான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் கொள்ளையர்கள் கடையின் சிசிடிவி கேமராக்களை தடை செய்து விட்டு இந்த கொள்ளை சம்பவத்தில ஈடுபட்டுள்ளனர். மருந்து கடையானது தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் எப்பொழுதும் வாகன போக்குவரத்து இருக்கும் இடத்தில் இச்சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,

கொள்ளை நடந்த மருந்து கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் கைரேகை நிபுணர் சையது ரஹமத்துல்லா உதவியுடன்  மோப்ப நாய் பைராவ் வரவளைக்கப்பட்டு மருந்து கடையை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் இரவுநேர ரோந்துப் பணிகளை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!