மார்க்சிஸ்ட் எம்.பி. வெங்கடேசனுக்கு கொரோனா பாதிப்பு

மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன், கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் எம்பியும், எழுத்தாளரும், மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன், கொரோனா தொற்றுக்கு மத்தியில் நிவாரண மற்றும் வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த சூழலில், கோவிட் தொற்று ஏற்பட்டது குறித்து சு.வெங்கடேசன் ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கொரொணா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!