மியாவாக்கி திட்டத்தில் 20 மரக்கன்று நடவு! திருச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மாசுபாட்டை குறைத்து தூய்மையான காற்று கிடைக்க ஏதுவாக, மியாவாக்கி திட்டத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

திருச்சி் மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான 1.30 ஏக்கர் பரப்பளவில் அடர்காடுகள் உருவாக்கும் (மியாவாக்கி) திட்டத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.

அதன்படி, கல்லக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு செய்து 54 நாட்டு வகை மரங்களான மகிழம், சொர்க்கம், நீர்மருது, மலைவேம்பு, புங்கமரம், பாதாம், தேக்கு, வேங்கை, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்வற்கான பணிகள் இன்று தொடங்கி உள்ளன.

இந்த திட்டத்தின் மூலம், தற்போது பெருகி வரும் காற்று மாசு குறைத்து தூய்மையான காற்றை சுவாசிக்க வழிவகை உண்டாகும்.

இந்த விழாவில், கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் ஹமீது எழுதிய, பேரூராட்சிக்கான முன் மாதிரி செயல்வடிவ புத்தகத்தை, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட, திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெகதீஸ்வரன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் ஹமீது ஊராட்சி் ஒன்றிய அலுவலர்கள், தன்னார்வலர்கள் உட்பட, 500-க்கும் மேற்பட்டோர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.

Translate »
error: Content is protected !!