கொரோனா தடுப்பு பணிகளுக்காக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) திறக்க ஸ்டாலின் உத்தரவு விட்டுள்ளார்.
மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். கட்டணத்தில் முடிந்தளவு சலுகை காட்டுமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவ அவசரநிலை அளவுக்கு #Covid19 தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மையம் (War Room) ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.
உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் தம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். pic.twitter.com/Cmn6aq8Ck4
— M.K.Stalin (@mkstalin) May 5, 2021