பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர், அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். இவரை இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர்.
விசாரணை முடிவில் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது, அதன்பின் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்பினார். இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிருப்தி அடைந்தது. இதனால் ஒயிட்–பால் கிரிக்கெட்டில் அவரை சேர்க்காமல் ஓரங்கட்டினர். இந்த நிலையில் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக முகமது அமிர் அறிவித்துள்ளார்.