ரஞ்சிக் கோப்பை போட்டிகள் ரத்து!

கொரேனா தடுப்பு நடவடிக்கையின் எதிரொலியாக இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டிகளை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

1934 -35-ல் தொடங்கப்பட்ட ரஞ்சி கோப்பைப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. மாநில கிரிக்கெட் சங்கங்கள் உடனான கலந்தாலோசனைக்குப் பிறகு 2020 – 21 உள்நாட்டு கிரிக்கெட் சீசனை சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியுடன் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

ரஞ்சி கோப்பை, விஜய் ஹஸாரே கோப்பை போட்டிகளை நடத்துவது தொடா்பான முடிவு, சையது முஷ்டாக் அலி போட்டி நிறைவுபெறும் தருணத்தில் எடுக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார். சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்துவதில் சிக்கல் உள்ளதால் இந்த வருடம் (2020-21) ரஞ்சி கோப்பை போட்டியை நடத்த முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பைப் போட்டிகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, எழுதிய கடிதத்தில், இந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டி நடைபெறவில்லை. உங்களிடமிருந்து கிடைத்த கருத்துகளைக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவுள்ளோம். 50 ஓவர் விஜய் ஹசாரே போட்டியையும் 50 ஓவர் மகளிர் போட்டியையும் நடத்துவதில் உறுதியாக உள்ளோம் என்று எழுதியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!