ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் 23,378 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 56,58,672 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 737 பேர் இறந்துள்ளனர், இதனால் இறப்பு எண்ணிக்கை 1 லட்சம் 39 ஆயிரம் 316 ஆக உள்ளது.
ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் 18,411 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 51,01,852 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 4,17,504 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.