ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் 23,962 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 56,82,634 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 725 பேர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தனர், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் 40 ஆயிரம் 041 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் 20,067 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 51,21,919 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 4,20,674 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.