ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் 23,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 61,72,812 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 779 பேர் இறந்தனர், இறப்பு எண்ணிக்கை 1 லட்சம் 55 ஆயிரம் 380 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில், இதுவரை 55,26,950 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 4,90,482 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.