விவேக் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

** சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக் என்று அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

** திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் நடிகர் விவேக்.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர், நடிகர் விவேக் என்று அவரது மறைவுக்கு  துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்..

Translate »
error: Content is protected !!