ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா குறைந்த அளவிலான பக்தர்களுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா திருமாமணி மண்டபத்தில் குறைந்த அளவிலான பக்தர்களுடன் நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் தரும் நிகழ்ச்சியுடன் நிறைவு

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 14ம் தேதி திரு நெடுந்தாண்டகம் நிகழ்வுடன் தொடங்கியது. அன்று முதல் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்களை அரையர்கள்  இசை, அபிநயத்துடன் பாடத் தொடங்கினார்கள்.

இந்த பாடல்களை பெருமாள் கேட்டு மகிழ்வதாக நம்பிக்கை. கடந்த 15ம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கியது. பகல் பத்து டிசம்பர் 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது. நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம்  எனும் மோகினி அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கடந்த 25ம் தேதி  முதல்  இராப் பத்து  தொடங்கியது.

அன்று அதிகாலை 4.45 மணிக்கு முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. முன்னதாக 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டைடை, கிளி மாலை, ரத்தின அங்கி அணிந்து புறப்பட்டு சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாயில், கொடி மரம், குலசேகரன் திருச்சுற்றுவிரஜாநதி மண்டபம் வழியாக   அரையர்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களைப்   பாடி வர, பெருமாளை பின் தொடர்ந்து வேத பாடல்களைப் பாடியபடி சென்றனர்.

அன்று முதல் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலர் தோரணங்களுடன் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மிக விரிவான பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது 24ம் தேதி  மாலை 6 மணி முதல் 25ம் தேதி காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை.

காலை 7 மணிக்கு பிறகுமற்ற நேரங்களில் கோயில் இணையதள முன்பதிவின் மூலம் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தமிழ்ப் பாசுரங்களுக்கான விழா என்றழைக்கப்படும் இந்த விழாவில் நாலாயிர திவ்வியப் பிரபந்த பாடல்களை அபிநயத்துடன் பாடுவார்கள். விழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான திருமங்கை மன்னன் வேடுபறி கடந்த 1ம் தேதி நடைபெற்றது.

நேற்றுடன் இராப்பத்து நிறைவு பெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலைகாலை வைகுண்ட ஏகாதேசி யின் நிறைவு நாளான இன்று நம்மாழ்வாருக்கு நம்பெருமாள் மோட்சம் தரும் நிகழ்ச்சி திருமாமணி மண்டபத்தில் குறைந்த அளவிலான பக்தர்களுடன் அதிகாலை நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து  புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைவார். அத்துடன் இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி நிகழ்ச்சி நிறைவடைகிறது.

ஆங்கில ஆண்டு கணக்கில் 2020ல் இரண்டு முறை சொர்க்க வாசல் திறப்பு. ஜனவரி 6ம் தேதியும் இன்றும் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் திறப்பு உள்ளிட்ட முக்கிய  நிகழ்வுகளை ஸ்ரீரங்கம் கோயில் இணைய தளம், யூ ட்யூப்பிலும் நேரலை செய்யப்பட்டது. வைகுண்ட ஏகாதசி விழாவில் இன்று வரை சுமார் 7 லட்சம் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் எனும்  பரமபதவாசல் மட்டும் கடந்து செல்ல ஆன்லைன் பதிவின்றியும் அனுமதிக்கப்பட்டனர். இதன்படி, கடந்த 25ம் தேதி முதல் தினமும் தலா 50 – 70 ஆயிரம் பேர் வருகைதந்து தரிசனம் செய்தனர் என்பது குறிபிடதக்கது. 2021 இந்த ஆண்டிற்கான வைகுந்த ஏகாதசி விழா வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி திருநெடுந்தாண்டகம்துடன் தொடங்கி 14ஆம் தேதி பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

Translate »
error: Content is protected !!