24436 பேருக்கு கொேரனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்…

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் பணி அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி.;

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பாக கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் அரசு முன்கள பணியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்களுக்கு முதன்மையாக கொரோனா தடுப்பூசி இரண்டு முறை கால இடைவெளியில் போடப்பட்டு வருகிறது. அரசு அறிவிப்பின்படி தற்போது 45 வயது முதல் 60 வயது வரை உள்ள பொதுமக்களுக்கு அரசின் மூலம் இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதேபோல் தற்போது நடக்க உள்ள சட்டமன்ற தோ்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலா்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 24,436 அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டுள்ளது. இதுவரையில் அரசு பணியாளர்கள் 13,851 பேருக்கும், தொற்று நோயால் பாதிப்படைந்தவர்கள் 45 முதல் 60 வயது வரையில் உள்ள பொதுமக்கள் 4493 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 6,092 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இலவசமாக போட்டுக்கொள்ள வேண்டும்

தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் ஆரோக்கியமுடன் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தடுப்பூசி மையங்கள் 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 அம்மா மினி கிளினிக்குகளிலும், 4 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்திடவும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடிய நோய் தொற்றை திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாக போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!