4 கோடி முதல் 5 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயார்… அரசின் அனுமதிக்காக காத்திருப்பு – சீரம் நிறுவனம்
கொரோனா நோய்த் தடுப்புக்காக ஏற்கனவே 4 கோடி முதல் 5 கோடி டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரித்து வைத்துள்ளதாகவும், அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் சீரம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனவல்லா, மருந்து தயாரிப்பதற்கான தளவாடங்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது 4 கோடி முதல் 5 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பு மருந்து இருப்பு வைத்துள்ளாக கூறிய அவர், வரும் மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவசரகால பயன்பாட்டுக்கு அரசிடம் அங்கீகாரம் கேட்டுள்ளதாக கூறிய பூனவல்லா, அதற்காகக் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.