தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,97,116 ஆக அதிகரித்துள்ளதாக,தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரேநாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,97,116 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 845 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,92,527 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் 39 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இன்று 4,301 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,50,856 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 35,480 பேர் கோவிட் தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில விவரங்கள் வருமாறு: இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 81,782. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 91,93,849.
மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,20,882 பேர். பெண்கள் 2,76,202 பேர். மூன்றாம் பாலினத்தவர் 32 பேர். இன்று கோவிட் வைரஸ் நோய்த் தொற்றால் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 21 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 11 பேர் இறந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,780 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 3,556 பேர் உயிரிழந்துள்ளனர்.
—