இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா! மீண்டும் பல இடங்களில் ஊரடங்கு அமல்

இலங்கையில் கொரொனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, அங்கு பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அண்டை நாடான இலங்கையில், இலங்கையில் நேற்று ஒருநாளில் மட்டும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 6,287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் 2,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு பள்ளிகள், முக்கிய அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அரசின் நடவடிக்கைகளால் தொற்று பரவுவது ஓரளவு கட்டுக்குள் இருந்தது.

மேலும், வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. தலைநகர் கொழும்பு மற்றும் அதை சுற்றியுள்ள ஆறு கிராமங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் முக்கிய மீன் சந்தையில், 50க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மீன் சந்தை மூடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!