ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,439 கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,439 கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 55,85,799 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 697 பேர் கொரோனா நோய்த்தொற்றால் இறந்துள்ளனர், இதனால் கொரோனா நோய்த்தொற்றின் இறப்பு எண்ணிக்கை 1 லட்சம் 37 ஆயிரம் 262 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 50,53,417 பேர் சிகிச்சை பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, ​​3,95,120 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக  ரஷ்யா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!