அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா பாசிட்டிவ்

மக்கள் தொகை அதிகம் உள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,098-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2019- ஆம் ஆண்டு சீனா நாட்டின் யூகான் பகுதியில் இருந்து புறப்பட்ட கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் இதுவரை 3.50 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், சமீப காலமாக அமெரிக்காவில் தொற்று பரவல் கணிசமாக குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘‘கடந்த 24 மணி நேரத்தில் 41,098- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்று பாதிப்பால் மேலும் 220- பேர் உயிரிழந்துள்ளதாகவும் எனினும், தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகளிலேயே தொற்று பரவல் அதிகமாக காணப்படுவதாகவும்’’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!